கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேட்டியளித்த அவர், 1998ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கோவை குண்டுவெடிப்பில் 56 பேர் கொல்லப்பட்டதாக கூறினார்.
மேலும், பாஜக மூத்த தலைவர் அத்வானி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், குண்டுவெடிப்பு நிகழ்த்திய அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்திருப்பது மூலம் பயங்கரவாதத்தை திமுக அரசு ஆதரிக்கிறது என அவர் குற்றச்சாட்டினார்.
மேலும், குண்டுவெடிப்பில் உயிர் தியாகம் செய்தவர்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு இந்த செயலை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.