பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. இதை ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான குழு 2 நாட்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாலத்தில் சில குறைபாடுகள் உள்ளதாகவும், அதை உடனடியாக சரிசெய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மதுரையில் இருந்து பாம்பன் வந்தடைந்த ரயில்வே உயர் அதிகாரிகள், புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அளிக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், புதிய பாலம் இயங்க விரைவில் அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.