ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக ஆட்சி - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
Mar 15, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் செய்வதை குடும்ப தொழிலாக்கி ஏழை, எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுக-வை, 2026-ல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “விஞ்ஞானபூர்வமாக ஊழல் பட்டம் பெற்ற திமுக… சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே ஆட்சியென்றால் அது திமுக ஆட்சிதான்…

2. திமுக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த பாவங்களை சேர்த்த திமுக…

3. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பத்தினரின் பாவத்தை சேர்த்தது திமுகதான்..

4. வேங்கைவயலில் மலம் கழந்த தண்ணீரை ஊர் மக்கள் அருந்தி பெரும் இன்னலுக்குள்ளானதை இன்றளவும் யார் அதை செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் ஊர் மக்களின் பாவத்தை வாங்கிக்கொண்ட திமுக… பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் அம்பேத்கரை பற்றி பேசுவது நியாயமா?

5. சென்னையில் 4000 கோடியில் மழைநீர் வடிகால்களெல்லாம் அமைத்து விட்டோம் என்று கூறிக்கொள்ளும் திமுக… மழைக்காலங்களில் மக்கள் படும் இன்னல்கள்… உடைமைகளெல்லாம் இழந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் பாவங்களை வாங்கிக் கொண்டது திமுகதான்…

ஊழல் செய்வதையே குடும்பத்தொழிலாக்கி ஏழை,எளிய மக்களின் பாவங்களை சேர்த்த நிர்வாக திறனற்ற திமுகவை 2026 -இல் வீட்டிற்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு கிடைக்கும் புண்ணியம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

Tags: Tamil NaduDMKDMK governmentSenior BJP leader Tamilisai SoundararajanSarkaria Commission
ShareTweetSendShare
Previous Post

தமிழக எல்லையில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் – இபிஎஸ் கண்டனம்!

Next Post

பாஜக எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies