மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது அம்பேத்கரை திட்டமிட்டு அவமதித்ததாக கூறி, பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் விவகாரத்தில் பாஜக மீது குற்றம்சாட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிலிருந்தபோது அம்பேத்கரை திட்டமிட்டு அவமதித்ததாக கூறி, பாஜக உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இருகட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்குர், தேர்தலில் அம்பேத்கர் தோல்வியடைய நேரு வேண்டுமென்றே சதி செய்ததாகவும், இதன் காரணமாக அம்பேத்கர் அரசியலை விட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டதாகவும் கூறினார்.