சேலத்தில் இரவு நேரங்களில் உலா வரும் மங்கி குல்லா கொள்ளையர்களின் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 இளைஞர்கள் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தனர். மங்கி குல்லா மற்றும் முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள், வீடுகளை நோட்டமிட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.
இதேபோல், வேறு பகுதிகளிலும் 2 பேர் முகக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் உலா வந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கொள்ளை அடிக்கும் நோக்கில் அவர்கள் சுற்றித் திரிந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.