தமிழக 4 வழிச்சாலை பணிகளுக்காக ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திராவை இணைக்கும் நெடுஞ்சாலைக்கு ₹1328 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
Bharatmala Pariyojana, தொடங்கப்பட்டதிலிருந்து தமிழகத்தில் இதுவரை 2414 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் பிரதமர் மோடி அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் ஆதரவு இல்லாததால், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் முன்னேற்றம் தாமதமாகி வருவதால், தேவையான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநில அரசு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அ ண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.