மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
மதுரை விமான நிலையத்தில், காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது.
எனவே, மதுரை விமான நிலையத்தில் இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, மதுரையில் இன்று முதல் இரவு நேர விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக மதுரையில் இருந்து சென்னைக்கு இரவு 10:45 மணிக்கு கடைசி இண்டிகோ விமானம் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து 9.25 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 10.20 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடையும் எனவும், பின்னர் மீண்டும் 10.45க்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 12.05 மணிக்கு சென்னை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.