பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு விமானம் நிலையம் அமைய உள்ளதாக தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்