ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பொதுச் சேவைக்கும், மக்கள் நலனுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.