அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால், அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் ஆதரவு பெற்ற செலவினங்கள் தொடர்பான மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கலானது. இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்காததால், வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
வாக்கெடுப்பில் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 38 எம்.பி.க்களே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், உடனடியாக பொருளாதார அவசர நிலையைக் கொண்டு வராவிட்டால் அமெரிக்கா அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கூட்டாட்சி அமைப்புகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கட்டாய விடுப்பிலோ அல்லது ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கோ தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.