தமிழக அரசைக் கண்டித்து பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 914 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா, கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் கோவையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியதைக் கண்டித்து காந்திபுரத்தில் பாஜகவினர் பேரணி சென்றனர்.
அப்போது தடையை மீறியதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதுதொடர்பாக அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சிவலிங்கம் உட்பட 914 பேர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.