இந்தியாவில் இணைய வசதி மலிவான விலையில் கிடைப்பதாகவும், வீடியோ கால் செய்தாலும் அதற்கான செலவு மிகக்குறைவு எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்றார். பின்னர் அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் மட்டுமே மிகக்குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
வீடியோ கால் மூலம் பேசவும் குறைந்த செலவே ஆவதாக அவர் கூறினார். கிராம பகுதிகளிலும் சர்வதேச விமான நிலையத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் விக்ஷித் பாரத் திட்டத்தின் நோக்கம் என்று கூறிய பிரதமர் மோடி, தனது குடும்பத்தை சேர்ந்த 140 கோடி பேரின் நலனுக்காக இன்னும் கூடுதலாக உழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.