விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், விடுமுறை தினத்தையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
மூலவருக்கு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், கால பூஜைகள் ஆகியவை செய்யப்பட்டன. பொது தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரமும், 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் சுமார் 4 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.