நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க வனத்துறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக புல்லட் ராஜா என்ற ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. 30க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதுடன் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் யானை சூறையாடியது.
இதனால் மிகுந்த அச்சத்திற்குள்ளான மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காட்டு யானையை பிடிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், குடியிருப்புகளை சுற்றி பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.