கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “வரும் 2025 ஆம் ஆண்டு பயிர் பருவத்தில், அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ₹12,100 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்காக, பாரதப் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மற்றும் மற்றும் தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டில் 25.7% தென்னை உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.