2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை விரட்ட மக்கள் ஒன்று திரண்டு விட்டார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார். மத்திய அரசின் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசியலில் எடப்பாடி பழனிசாமியின் கப்பல் மெல்ல, மெல்ல மூழ்கி கொண்டிருப்பதாகவும் அவர் ’கூறினார். திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்ட மக்கள் திரண்டு விட்டார்கள் என்றும் தினகரன் கூறினார்.