ஈரோட்டில் உள்ள சக்தி விநாயகர் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப சாமி திருவீதி உலா நடைபெற்றது.
பவானி பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஐயப்பன் கோவிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதில், பக்தர்கள் விநாயகர், முருகன், கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து பங்கேற்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி திருவீதியுலா வந்தனர்.