தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஒன்பதாம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆண்டுதோறும் பாரத மாதா தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஒன்பதாம் ஆண்டு தேர் பவனி நிகழ்ச்சியையொட்டி பாரத மாதாவாக அவதரித்த அன்னை பராசக்திக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேர் பவனி துவங்கியது. அப்போது மேள தாளங்கள் முழங்க சிறுவர், சிறுமியர் சிலம்பம் சுற்றியது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. நகரின் முக்கிய சாலை வழியாக சென்ற பவனி, பங்களாமேட்டில் நிறைவடைந்தது. இதில் இந்து அமைப்பினர் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.