குஜராத்தில் நடைபெற்ற ரோஜர் மேளா வேலைவாய்ப்பு திருவிழாவில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.
அப்போது அவர் மத்திய அரசு பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சுக் மாண்டவியா, பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது என்றார்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார்.