கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல் வார சந்தையில் காட்டெருமை தாக்கி ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்தார். அதேபோல் ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும் காட்டெருமை தாக்குதலுக்கு உள்ளானார்.
இவ்வாறு பேருந்து நிலையம், நாயுடு புரம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.