அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும் என பசுமைத்தாயக தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிம வளங்கள் சுரண்டப்படுவது பருவநிலை மாற்றத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஆற்று நீரில் மாசு ஏற்படுத்துபவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நீர்நிலைகள் மாசு ஏற்பட காரணமானவர்களிடம் இருந்து இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.