ஆ.ராசாவுக்கு எதிரான அமலாகத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்கக்கூடாது என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாகத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாகத்துறை தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.