இந்தியர்கள் டிசம்பர் 2026 வரை விசா இல்லாமல் மலேசியா செல்லலாம். மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் வேலை, வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் பல ஆண்டுகளாக தொடர்பு உள்ளது.
இந்தியர்கள் பலர் முன்பே மலேசியாவில் குடியேறி அந்த நாட்டின் குடிமகன்கள் ஆகிவிட்டனர். மலேசியாவில் தமிழ் மொழி மூன்றாவது முக்கிய மொழியாக உள்ளது.
மேலும், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை சுமார் 27 லட்சம் ஆகும். இந்த சூழலில், 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை விசா இல்லாமல் இந்தியர்கள் மலேசிய செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.