ரஜினிகாந்த் படங்களுக்கு தற்போது இசையமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உள்ளதாக இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை அருகே ஜனவரி 18-ம் தேதி தேவாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்த இசையமைப்பாளர் தேவா, அழகர் பாடலை முதல் முறையாக மதுரை மண்ணில் பாட உள்ளேன் எனவும், காலம் கடந்தும் தனது பாடல் நிலைத்து இருப்பதற்கு பாக்கியம் செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
35 ஆண்டுகளுக்கு பிறகும் தனது பாடல் படங்களில் பயன்படுத்தப்படுவதாக கூறிய தேவா, மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டார்.