கோர விபத்தில் சிக்கிய VOLVO XC90 SUV கார் : பாதுகாப்பான காரில் பயணித்தும் பலியான குடும்பம் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோர விபத்தில் சிக்கிய VOLVO XC90 SUV கார் : பாதுகாப்பான காரில் பயணித்தும் பலியான குடும்பம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புக்கு பெயர் போன கார்களுள் ஒன்றான VOLVO நிறுவனத்தின் XC90 SUV கார் மீது கண்டெய்னர் லாரி சரிந்து விழுந்த விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி குடும்பத்துடன் பலியான சம்பவம் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

பல தரப்பட்ட சோதனைகளை எதிர்கொண்ட பின்னரே, மக்கள் பயன்பாட்டுக்கு கார்கள் கொண்டு வரப்படுகின்றன…. உலகின் பாதுகாப்பான கார்கள் வரிசையில் வால்வோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட XC90 SUV மாடல் கார்கள் திகழ்கின்றன. மற்ற கார்களை ஒப்பிடுகையில் VOLVO XC90 SUV மாடல் காரின் பாதுகாப்பு அம்சங்கள் சற்று கூடுதல் எனக் கூறப்படுவதால், இந்த காரின் விலையும் சற்று அதிகம்தான். 2002-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த கார் சர்வதேச அளவில் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக UK-வில் பூஜ்ஜியம் விபத்துக்களை இந்த கார் பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரில் முதலீடு செய்தும், விபத்து நிகழ்கிறது.. அந்த விபத்தில் உயிர்கள் பறிபோகிறது என்றால்… அதை விதி என்பதா? அல்லது துரதிஷ்டம் என்பதா…?

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் ஒன்றின், தலைமை நிர்வாக அதிகாரியான சந்திராம் ஏகபாகோல், தனது குடும்பத்தினர் 5 பேருடன் தனது VOLVO XC90 SUV காரில் சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளார். கார் பெங்களூர் – துமகுரு தேசிய நெடுஞ்சாலை வழியாக திப்பகொண்டனஹள்ளி  அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்  வழித்தடத்தில் வந்த கார் திடீரென நிற்க, அதன் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர், கார் மீது மோதுவதை தவிர்க்க லாரியை எதிர் மார்க்கத்திற்கு திருப்பியுள்ளார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சென்டர் மீடியனை தாண்டி, எதிர் திசையில் வந்த VOLVO XC90 SUV கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் மேற்பகுதி முழுவதுமாக நசுங்கி அதனுள் பயணித்த, ஐடி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சந்திராம் ஏகபாகோல் உட்பட குடும்பத்தார் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கர்நாடக மாநில போலீசார், கார் மீது விழுந்த கண்டெய்னர் லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்து தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், VOLVO XC90 SUV காரை பயன்படுத்தி வரும் பலர் விபத்து குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விபத்திற்கு VOLVO நிறுவனம் பொறுப்பல்ல எனவும், இதுபோன்ற விபத்தில் எந்த நிறுவனத்தின் கார் சிக்கியிருந்தாலும் அதில் பயணித்தவர்களுக்கு இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Chandram EkabagolCEO oThippakondanahallibangalore car accidentMAHARASHTRAcar accidentBengaluru-based IT company CEOVOLVO XC90 SUV
ShareTweetSendShare
Previous Post

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

Next Post

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies