திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்களில் 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கன்ட்டோண்மெண்ட் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் 10 பேர், நேற்று மாலை, காவிரி ஆற்றின் அம்மா மண்டப படித்துறைக்கு குளிக்கச் சென்றிருந்தனர். ஆற்றின் நடுவே சென்றபோது ஜாகிர் உசேன், சிம்பு, விக்னேஷ் ஆகிய மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேரில் சென்ற அவர்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் 3 மாணவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.