மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்.
பயனுள்ள பொருளாதார உத்திகளை வகுப்பதற்கு பல்வேறு நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்க அவரது குழு ஆர்வமாக உள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.