பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். தொடர்ந்து 28-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்லும் அமித்ஷா, மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், அன்றைய தினமே மீண்டும் டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.