அட்டகாசமான அம்சங்கள் - விரைவில் அசத்த வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் - சிறப்பு கட்டுரை!
Oct 4, 2025, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அட்டகாசமான அம்சங்கள் – விரைவில் அசத்த வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 25, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின், பொதுமக்களின் ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்போது, இந்தியா முழுவதும் 136 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. குறுகிய மற்றும் நடுத்தர தூர வழித்தடங்களில் மின்மயமாக்கப்பட்ட நெட்வொர்க்கில் இந்த வந்தே பாரத் இரயில் சேவைகள் உள்ளன. மேலும், வந்தே பாரத் CHAIR CAR ரயில்கள், பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த வந்தே பாரத் ரயில்கள் வரிசையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ரயில்களை அடிப்படையாகக் கொண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் இருக்கும் BEML நிறுவனத்தில் தான் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் முன்மாதிரியை வெளியிட்டிருக்கும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விரைவில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

800 முதல் 1,200 கிலோமீட்டர் வரை உள்ள நீண்ட தூரத்தை, ஒரே இரவில் பயணம் செய்ய கூடிய வகையில், இந்த இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாகும். எனினும், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை மட்டுமே இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முழுவதும் துருப்பிடிக்காத இரும்பினால் கட்டமைக்கப் பட்டுள்ளது.

11 ஏசி 3 TIER பெட்டிகள், 4 ஏசி 2 TIER பெட்டிகள் மற்றும் 1 ஏசி FIRST CLASS என ஒரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. ஒரு ரயிலில், படுக்கை வசதியுடனான கூடிய 823 இருக்கைகள் உள்ளன. பயணிகளுக்குத் தேவையான பல்வேறு நவீன வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன.

பெர்த்களில் மேம்படுத்தப்பட்ட குஷனிங் மற்றும் மேல் மற்றும் மிடில் பெர்த்களில் ஏற வசதியான ஏணிகள் உள்ளன. பெட்டிகளுக்குள் தூய்மையான சூழலுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் முழுமையாக சீல் செய்யப்பட்ட கேங்வேகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லவதற்கு தானியாங்கி கதவுகள் மற்றும் ஒவ்வொரு பெட்டிக்கும் Emergency Talk Back Unit என்ற கருவி உள்ளது. இதன் மூலம் முன்பகுதியில் உள்ள லோகோ பைலட்டிடம் பேச முடியும் அதற்கு அவர்கள் பதில் அளிக்க கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முழுவதுமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அது தவிர அனைத்து பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் உள்ளன. சென்சார் மூலம் இயக்கப்படும் விளக்குகள், தானியங்கி கதவுகள் மற்றும் அதிநவீன கழிவறைகள் இந்த இரயிலில் உள்ளன.

வைஃபை மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், USB சார்ஜிங் வசதி, மற்றும் ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்புகள் பாதுகாப்பு என பல சிறப்பம்சங்கள் இந்த இரயிலில் உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெர்த்கள் மற்றும் பிரத்யேக கழிப்பறைகள் மற்றும் USB சார்ஜிங் வசதியுடன் ஒருங்கிணைந்த READING LIGHTS ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் இருப்பது போல இதிலும் KAVACH பாதுகாப்பு அமைப்பே இடம் பெற்றுள்ளது. மேலும், ஆண்டி-கிளைம்பிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்துகளின் போது பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக குவிவதைத் தடுக்கும்.

மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட பயணிகள் வசதி ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், மலிவான மற்றும் வசதியான நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக தயாரிக்கப் பட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்றும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகமாகி, 18 மாதங்களுக்குப் பிறகு மாதத்துக்கு 2 அல்லது 3 ரயில்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags: Vande Bharat CHAIR CAR trainsprime minister modiVande Bharat trainsMinister Ashwini VaishnavVande Bharat sleeper coaches
ShareTweetSendShare
Previous Post

வினோத் காம்ப்ளியின் மருத்துவச்செலவுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி – சிவசேனா அறிவிப்பு!

Next Post

வேலுநாச்சியார் நினைவு தினம் – நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies