உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை சிவ சேனா அறிவித்துள்ளது.
52 வயதான வினோத் காம்ப்ளிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தானேவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சிவ சேனா மருத்துவ செலவுக்காக காம்ப்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளது