கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட டன் கணக்கிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு வரும் கோழி தீவன கண்டெய்னர் லாரியில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சர்வேயர் காலனிக்கு வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 94 மூட்டையில் ஆயிரத்து 400 கிலோ கொண்ட போதைப் பொருட்கள் மற்றும் கண்டெய்னர் லாரி உள்ளிட்ட 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.