ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.