காசாவில் ஒருமணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் தற்போது வரை ஓயவில்லை. எங்கு பார்த்தாலும் குண்டு சத்தம் ஒலித்துக் கொண்டே இருப்பதால் போர் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 14 ஆயிரத்து 500 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், ஒருமணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.