அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.