கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவராஜ்குமாருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொள்ள கடந்த 18ஆம் தேதி அவர் அமெரிக்கா சென்றார்.
அங்கு மியாமி மாகாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது சிறுநீரகம் அகற்றப்பட்டு, செயற்கை சிறுநீரகம் பொறுத்தப்பட்டது. அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் பழைய நிலைக்கு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவராஜ்குமாரின் உடல்நிலைகுறித்து விளக்கமளித்த அவரது மனைவி கீதா, இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சிவராஜ்குமார் ரசிகர்களிடம் பேசுவார் என தெரிவித்தார்.