கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 20-வது ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, தேவாலயத்தில் சிறப்பு திருபலி நடத்தப்பட்டு, பின்னர் கடற்கரை வழியாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில், இறந்தவர்களின் உறவினர்கள், மீனவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், சுனாமியில் பலியானவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மேலமணக்குடி கடற்கரை கிராமத்தில் உள்ள கல்லறையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று கொட்டில்பாடு , குளச்சல் போன்ற கடலோர பகுதிகளிலும் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.