சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!
Sep 18, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி, 610 பேர் பலியாகினர். சுனாமி தாக்கியதன் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமி ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி கடலுக்கு செல்லவில்லை. திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சுனாமி பேரலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும், கடல் மற்றும் மீனவர்கள் பாதுகாக்க வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, ஏாளமான பொது மக்கள் மற்றும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், கடல் அன்னைக்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பேரிடர்காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்று பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உயிரிழந்தவர்களுக்கு  அவர்களது உறவினர்கள் திதி கொடுத்தும், கடலில் பால் ஊற்றியும் மரியாதை செய்தனர். நினைவு ஸ்தூபி மற்றும் இறந்தவர்கள் நினைவிடத்தில் பொது மக்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மௌன ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல், பூம்புகார், சந்திரபாடி , திருமுல்லைவாசல், பழையார் மற்றும் வானகிரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை எம்.பி சுதா., பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

 

Tags: laying wreathskanyakumariCuddaloreMelamanakudiTsunami 20th anniversary
ShareTweetSendShare
Previous Post

தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

Next Post

அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் – ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது!

Related News

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies