தேனி அருகே நடைபெற்ற மைக் செட் இசைப்போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
மைக் செட் உரிமையாளர்கள் தங்களது மைக்செட்டின் தனித் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இசைப்போட்டி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூரில் 11-ம் ஆண்டு இசைப்போட்டி திருவிழா நடைபெற்றது.
இதில், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். பழைய பாடல்கள் மட்டுமே இசைக்கப்பட்ட நிலையில், எந்த ஒலிபெருக்கியில் பாடல் அதிக ஒலியுடன் தெளிவாக கேட்கிறது என்பதை வைத்து சிறந்த ஒலிபெருக்கி தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.