அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதிய நிலையில், தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளியான ஞானசேகரன் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ வசதியும் ஏற்படுத்தித் தர தமிழக டிஜிபி-க்கும் ஆணையிட்டுள்ளது.
FIR கசிவதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
















