முதல் தகவல் அறிக்கையை கசிய விட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
May 19, 2025, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் தகவல் அறிக்கையை கசிய விட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பெயர், அடையாளத்துடன் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர் குற்றவாளி ஒருவனால் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாக, அந்த மாணவியின் பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்களுடன் கூடிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியில் கசியவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. காவல்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கூட தெரியாத அதிகாரிகளால் கையாளப்படும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட ஒருவரைத் தவிர இன்னொருவர் யார்? என்று தெரியவில்லை. அவரை பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்ந்து போகச் செய்யும் நோக்குடன் தான் காவல்துறை இவ்வாறு செய்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை முதல் தகவல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவத்துள்ளார்.

Tags: Anna Universitytamilnadu governmentchennai policeanbumani ramadossAnna University campusstudent sexual assaultstudent fir released issueDMK
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கேட்கும் வங்கதேச அரசு – சிறப்பு தொகுப்பு!

Next Post

நடப்பு ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை ; விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies