தனது சிறந்த கல்வித் திறனால், இந்தியப் பொருளாதார மீட்சிக்கு ஆலோசகராக விளங்கியவர் மன்மோகன்சிங் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சிறந்த பொருளாதார ஆலோசகருமான மன்மோகன் மறைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. தனது சிறந்த கல்வித் திறனால், இந்தியப் பொருளாதார மீட்சிக்கு ஆலோசகராக விளங்கியவர்,
பல்வேறு அரசாங்கப் பொறுப்புகள் வகித்ததுடன், மத்திய நிதி அமைச்சராகவும் செயல்பட்டார். சிறந்த பண்பாளரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.