பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு ஆயிரத்து 290 கனஅடி நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. 35 அடி உயரமுள்ள இதன் நீர்மட்டம் 34.92 அடியை எட்டிய நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், பூண்டி அணையின் பாதுகாப்பு கருதி 8 மற்றும் 9ஆவது மதகுகள் வழியாக 500 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.