திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் முன்பு உள்ள கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களின் வருகையும், முருக பக்தர்களின் கூட்டமும் சேர்ந்து கொண்டது. . இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.