மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரங்களையும் மன்மோகன் சிங் தனக்கு வழங்கியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டதாக தெரிவித்ததார். நேர்மையுடன் பணியாற்றிய எளிமையான தலைவர் மன்மோகன் சிங் என்றும், 2004-ல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாகவும் கூறினார்.
நாட்டுக்காக 100% சுதந்திரமாக பணியாற்றும் வாய்ப்பை அளித்ததாகவும், 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல திட்டங்களை அவரது வழிகாட்டுதலுடன் செயல்படுத்தியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.