இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை மாருதி சுசூகியின் வேகன்ஆர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இது இன்றுவரை இந்தியாவில் 6.6 லட்சம் சிஎன்ஜி மாடல் கார்களை விற்பனை செய்துள்ளது. அதன் சிறிய வடிவமைப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய பெரிய கேபினுக்காகவே மக்கள் இதனை அதிகம் விரும்புகிறார்கள். இந்த மாடல் இந்திய சந்தையில் அதன் உற்பத்தியை தொடங்கி 25 ஆண்டுகள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.