அமெரிக்காவில் விருந்தினர்களுக்காக திரையிடப்பட்ட மணமகளின் வாழ்க்கை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளம்பெண்ணான சுரபி என்பவருக்கு, லண்டனை சேர்ந்த ரிஷப் என்பவருடன் திருமணம் நடந்தது. முன்னதாக அங்கு லேசர் ஒளி விளக்குகளை கொண்டு குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.
அதில் மணமகளின் தந்தையுடனான பாசத்திற்குரிய தருணங்கள், பள்ளி-கல்லூரி வாழ்க்கை, எதிர்கால கணவரை சந்தித்து காதல் வயப்படுவது போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.
அந்த வீடியோவின் இறுதியில் திரைச்சீலை மறைவில் இருந்து மணமகள் ஆரவாரத்துடன் வெளிப்பட்டு மணமகனை திருமணம் செய்து கொள்கிறார். இந்த வீடியோ 13 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.