பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மருமகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ம் தேதி இம்ரான்கானை கைது செய்ததற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை வெடித்தது.
இது தொடர்பான விசாரணை ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 60 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த இம்ரான்கானின் மருமகன் ஹாசன் கான் நியாசிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராணுவ கமாண்டரின் வீட்டை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.