காசா அகதிகள் முகாம் அருகே உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர்.
மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடாத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது