கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக குணா குகை, தூண்பாறை, பூம்பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே கூடுதல் காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.