திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் வருகை தந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இதையடுத்து மலைக்கோயில் கொடி மரத்தை வணங்கிய ஆர்.என்.ரவி, முருகப்பெருமானை 15 நிமிடம் பூஜை செய்து வழிபட்டார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மலர் மாலை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆளுநரின் வருகையையொட்டி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.